முக்கிய நிகழ்வுகள்
சமீபத்திய நிகழ்வு
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தலைமையில் 30/09/2023 சனிக்கிழமை இன்று பொபினி நகரில் நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அளித்த சன்மார்க்க கூட்டு வழிபாடு நமது பிரான்ஸ் சன்மார்க்க சங்கம் சார்பாக சிறப்பாக நடந்தது.
அன்பர்கள் கலந்து கொண்டு சன்மார்க்க சத்சங்கம் மற்றும் தியானம் போன்ற இறைநிகழ்வில் பங்கு கொண்டு ஆன்மலாபம் பெற்றார்கள்.
இந்நிகழ்வை நடத்திய ஆண்டவருக்கு ஆயிரம் கோடி நன்றிகள் .
சன்மார்க்க பணியில்
வள்ளலார் அருள்ஜோதி பணிமன்றம்.-பிரான்ஸ் .
வலைதள நோக்கம்
சமரச சுத்த சன்மார்க்கம் என்ற கொள்கை, வடலூர் வள்ளலார் பரப்பிய அருள் நெறி. சாதி, இனம், சமயம், மதம், மொழி, தேசம், கலை, அரசியல், உருவ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு அனைத்தும் கடந்த நிலைதான் சன்மார்க்கம். இறைவனை அறியவும், உணரவும். தியானிக்கவும் உதவுகிற, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு மார்க்கங்களில், சன்மார்க்கம், ஞானமார்க்கம்.
பரந்து விரிந்த இப்பூவுலகில் எத்துணையோ அவதார புருஷர்களும், யோகிகளும், சித்தர்களும், சத்தர்களும், முத்தர்களும், முனிவர்களும் அவ்வப்போது தோன்றி, உலகு உய்ந்திட, நன்னெறி காட்டி உள்ளனர். ஆனால் இதுவரை எவரும் மரணத்தை வென்றது இல்லை இராமலிங்க வள்ளலார் ஒருவர் மட்டுமே மரணத்தை வென்றிட இயலும் என்றும். இத்தேகத்தை அழியாத நித்திய தேகம் ஆக்க இயலும் என்றும் புரட்சிகரமான கருத்தை விதித்துள்ளார். மரணத்தை வென்றும் காட்டினார். இப்புதிய கல்வி, சாகாத கல்வி வித்தூன்றி விளைநிலத்தில் அமுதப்பயிராகத் தழைத்து வளர்ந்து, இப்பிரபஞ்சம் முழுவதும் வேரூன்றிட, முதல்முயற்சி எடுத்தல் நமது கடமை, நமது அரசின் கடமை.
பதஞ்சலி யோக சூத்ரமும், யோகாசனத் தத்துவங்களும் பாரத்திலிருந்து. உலகனைத்தும் பரவி, உலக மக்களைப் பின்பற்றச் செய்தது போல்….. மிகப் புதுமையான சமரச சுத்த சன்மார்க்க நெறியினையும், சாகாக் கல்வியினையும், அழிவில்லா நித்திய தேகம் பெறும் மார்க்கத்தையும், ஜீவகாருண்யக் கொள்கைகளையும், ஊர் தேசம் உலகம் எங்கும் பரப்பி, ஒளி ஏற்றித் தமிழகமும், பாரதமும் பேரானந்தமும் பெருமையும் ஏய்துதல் வேண்டும்.