பாரீஸ் மண்ணில் சித்ரா பவுர்ணமி தரிசனம் (சந்திரன்).
சந்திரன் பற்றி வள்ளலார் அருளியது .
அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும்.
அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி
அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா, ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு. பிண்டத்தில் அகப்புறம் ஜீவன், ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த அறிவே ஜீவ அறிவு. பிண்டத்தில் புறம் கரணம், ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு. பிண்டத்தில் புறப்புறம் கண் முதலிய இந்திரியங்கள், ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. இதுபோலவே கரணக்காட்சி, ஜீவக்காட்சி, ஆன்மக்காட்சியுமுண்டு. இதுபோல், அண்டத்தில் அகம் அக்கினி, அண்டத்தில் அகப்புறம் சூரியன், அண்டத்தில் புறம் சந்திரன், அண்டத்தில் புறப்புறம் நக்ஷத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம் - ஆக எட்டிடத்திலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ளது
-திருஅருட்பா உரைநடை பகுதி.(வள்ளலார்)
இயற்கை உண்மையரென்றும்,
இயற்கை அறிவினரென்றும்,
இயற்கை இன்பினரென்றும்,
இயற்கையாய் விளங்குகினற இறைவனை செயற்கையாக்கி சடங்குகள் செய்து அதில் புகழும், பணமும் தேடும் மனிதம் மாற வேண்டும் .
அறிவுகொண்டு ஆண்டவரை அறிக ...