சமீபத்திய நிகழ்வுகள்

VALLALAR 200 – FRANCE .
      பாரீஸ் மண்ணில் வள்ளலின் ஆசி ஆம் நமது அருட்பிகார வள்ளலாரின் 200 வது அவதார திருநாள் நிகழ்வு.
போர் மேகம் சூழ்ந்த ஐரோப்பா கண்டம் அருட்பா ஒலியால் ஒளிபெரும் நம்பிக்கை எங்கள் வழிபாட்டின் நோக்கம் .
உலகம் தழைக்க வந்துதித்த வள்ளலார் கருணையால் இந்நிகழ்வினை நடத்தும் பாக்கியம் பெற்றோம்.
    இலங்கை தமிழ் உறவுகளின் உள்ளம் கவர்ந்த வள்ளலார் அவர்களுக்கு அளித்த அருளால் சிறப்பு பெறும் சன்மார்க்க பணிகள் .
இலங்கை மண்ணில் சன்மார்க்க நெறியில் ஜுவகாருண்யமே கடவுள் வழிபாடாக நடைபெறும் சன்மார்க்க பணியில் “வள்ளலாரும் வரலாறும் ” என்ற புத்தகம் பிரான்ஸ் இலங்கை தமிழ் சன்மார்க்க உறவுகளால் உருவாக்கப்பட்டு அம்மண்ணில் வள்ளலின் 200 வது வருகை தினத்தில் விதைக்கப்பட்டது.
பாரீஸ் மண்ணில் அப்புத்தக வெளியீடு ஆண்டவரின் அருளால் இனிதே நடந்தது.
   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாசி பெற்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது .

வள்ளலார் 200 வது வருவிக்கயுற்ற திருநாள் ஜுவகாருண்ய வழிபாடு .

வள்ளலார் 200 வது வருவிக்கயுற்ற திருநாள் ஜுவகாருண்ய வழிபாடு . தயவு அதுவே இறைவழிபாடு என்ற சன்மார்க்க நெறியின்படி இலங்கையில் கடந்த 6 மாதங்களாக இறையருள் நடத்தும் ஜுவகாருண்ய நிகழ்வு . கடும் பொருளாதார நிலையில் உள்ள இப்பகுதியில் வாழ்வாதாரம் இன்றி வாழும் ஜுவர்களின் பசிப்பிணி நீக்கும் பொருட்டு மளிகை பொருட்களை பிரான்ஸ் சன்மார்க்க சங்கம் வழங்கி வருகிறது . இம்மாதம் இலங்கை ஷப்னாவில் அகரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு . இச்செயல் அங்கு நடைபெற முக்கிய காரணமாக இருக்கும் நமது சன்மார்க்க உறவு தயவு தேவன் ஐயா அவர்களுக்கு உலக சன்மார்க்க உறவுகளின் சார்பாக நன்றிகளை அளித்து மகிழ்கிறோம்.

மே 29 அன்று பாரிஸ் நகரில் நமது திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் வடலூரில் துவக்கிய சத்திய தருமச்சாலையின் 156_ ஆம் ஆண்டு தொடக்க விழா

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் மே 29 அன்று பாரிஸ் நகரில் நமது திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் வடலூரில் துவக்கிய சத்திய தருமச்சாலையின் 156_ ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நமது பிரான்ஸ் சன்மார்க்க சங்கம் சார்பாக சிறப்பாக நடந்தது. அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சன்மார்க்க சத்சங்கம் மற்றும் தியானம் போன்ற இறைநிகழ்வில் பங்கு கொண்டு ஆன்மலாபம் பெற்றார்கள். இந்நிகழ்வை நடத்திய ஆண்டவருக்கு ஆயிரம் கோடி நன்றிகள் .

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச் சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும் மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
                                                     -திருஅருட்பா